வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (19/02/2018)

கடைசி தொடர்பு:08:34 (20/02/2018)

ஹைபர் லூப் ரயில்... 20 நிமிடத்தில் புனேயிலிருந்து மும்பை போகலாம்!

காராஷ்ட்ராவில் ரூ. 3.5 லட்சம் கோடி செலவில் ஹைபர்லூப் ரயில் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புனேயிலிருந்து இந்த ரயிலால் மும்பைக்கு 20 நிமிடத்தில் போய்விடலாம்.

மகராஷ்ட்ர மாநிலத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றும் வகையில் அந்த மாநில அரசு , உலகத் தொழில்முனைவோர்கள் மாநாட்டை மும்பையில் நடத்தி வருகிறது. மாநாட்டில் பங்கேற்க வந்த விர்ஜீன் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்டு பிரான்ஸன், மகாராஷ்ட்ர அரசுக்கு இடையே இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஹைபர்லூப் ரயில் போக்குவரத்து திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும். 

ஹைபர் லூப் ரயில் என்பது சுரங்கரயில் போலத்தான். இரும்பால் அமைக்கப்பட்ட சுரங்கத்துக்குள் 28 அடி நீளமும் 8.9 அடி அகலமும் 7.9 அடி உயரமும் கொண்ட ரயிலில் பயணிப்பதுதான். ஒலி மணிக்கு 1,235 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். விமானத்தின் அதிகபட்ச வேகம் 780 கிலோமீட்டர். கன்கர்டு விமானம் மட்டும் மணிக்கு 2,180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது. புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 450 கிலோமீட்டர். ஹைபர்லூப் ரயில் மணிக்கு 1,223 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இதுவரை எந்த நாட்டிலும் ஹைபர்லூப் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. அதனால், இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்தியாதான் ஹைபர்லூப் திட்டத்துக்கே முன்னோடியாகத் திகழும். தற்போது, புனேயிலிருந்து மும்பை செல்ல 3 மணி நேரம் ஆகிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டால் 20 நிமிடத்தில் சென்றுவிட முடியும். ஆண்டுக்கு 15 கோடி பயணிகள் பயணிக்கலாம். காந்த சக்தியில் இயங்கக் கூடிய இந்த ரயிலால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. விபத்துகள் நிகழ வாய்ப்பில்லை. எரிசக்தி மிச்சமாகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க