``திறப்புவிழாவில் திருடுபோன செல்லூர் ராஜு செல்போன்!’’ - நாட் ரீச்சபிள் மொபைலைத் தேடும் போலீஸ் | Minister Sellur Raju's cellphone missed in Tiruvannamalai function

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (19/02/2018)

கடைசி தொடர்பு:20:02 (19/02/2018)

``திறப்புவிழாவில் திருடுபோன செல்லூர் ராஜு செல்போன்!’’ - நாட் ரீச்சபிள் மொபைலைத் தேடும் போலீஸ்

திருவண்ணாமலை அருகே புதிய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருடுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் செல்லூர் ராஜூ

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில், மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இன்று (19.2.2018) புதியதாகக் கூட்டுறவு வங்கிக் கிளை திறக்கப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மற்றும் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர், மதிய உணவுக்கு அங்குள்ள வனத்துறை கெஸ்ட் அவுஸ்க்குச் சென்றார். அங்கு மதிய உணவு அருந்திவிட்டு ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அவரை பார்பதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் சென்றுள்ளனர். ஓய்வு எடுத்து முடித்துவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது, செல்போனை உதவியாளரிடம் கேட்டுள்ளார். உதவியாளரோ, `செல்போனை என்னிடம் தரவில்லை’ என்று கூறியுள்ளார். உதவியாளரிடம் செல்போனைக் கொடுத்ததாக எண்ணி, அதை வனத்துறை கெஸ்ட் ஹவுஸில் மறந்து விட்டதாக நினைத்திருக்கிறார்.

அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு அமைச்சரின் செல்போன் இல்லை. அதை யாரோ எடுத்துச் சென்றுள்ளனர். தற்சமயம் செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறது. அமைச்சர்களுடன் வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூற அமைச்சர் அப்செட் ஆகியிருக்கிறார். அதில் முக்கியமான வி.ஐ.பிகளில் செல்போன் எண்கள் இருப்பதால், திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி தலைமையில் தனி கவனம் செலுத்தி போலீஸார் அதைத் தேடி வருகின்றனர். இதனால், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கார்கள் பாதி வழியிலேயே அரைமணி நேரம் நின்றது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க