"ஈ.பி.எஸ். அணிக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகள் தருகிறார்கள்!"-  ஓ.பி.எஸ். அணியினர் மந்திரிகள் கண்முன்னே மோதல்

Clash

சென்னையை அடுத்த பெரியபாளையம் தண்டலம் பகுதியில் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் எல்லாபுரம் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று (19-02-18) மாலை நடந்தது. இதில் அமைச்சர்கள் பென்ஜமின். மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்  அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்  பேசுவதற்காக எழுந்தபோது ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், "அ.தி.மு.க சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டே தங்களை அழைப்பதில்லை... அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் தங்கள் அணியை சேர்ந்தவர்களுக்கே சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் வழங்கி வருகிறார்... அமைச்சர்களே கூறிய பின்னரும் சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு பணம் வசூலிக்கப் படுகிறது" என்று குற்றஞ்சாட்டியதால் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். அணியினர் அமைச்சர்கள் முன்னிலையில் காரசார வாக்குவாதத்தில் இறங்கினர். இரு தரப்பினருக்கும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டதா‌ல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் பெஞ்சமின் இருக்கையில் அமர்ந்த படியே மோதலை வேடிக்கை பார்க்க அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். சமாதானம் எடுபடாததால்,  அமைச்சர்கள் இருவரும்  உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டு கூட்டத்தில் இருந்து  வெளியேறினர் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள்  பெயரளவில் இணைந்தாலும் தொண்டர்கள் மனம் அளவில் ஒன்றுபடவில்லை என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!