2 பெண்களின் உயிரை காவுவாங்கிய கோர விபத்து! | Bus accident near tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (20/02/2018)

கடைசி தொடர்பு:10:45 (20/02/2018)

2 பெண்களின் உயிரை காவுவாங்கிய கோர விபத்து!

திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், திருப்பூரிலிருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் மேட்டுக்கடை என்ற இடத்தில் படு பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர், பழநி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த சாந்தாமணி என்பவராகும். மற்றொரு பெண்மணி யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும், இரண்டு பேருந்துகளையும் ஓட்டி வந்த ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 22 பயணிகள் படுகாயமடைந்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டு, உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பின்னர், சம்பவம் தொடர்பாக ஊதியூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.