`நான் விமர்சிக்கவேயில்லை' - முதல்வரை சந்தித்த பின் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். 

ஜெ.,வின் கனவுத் திட்டமான, தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தைத் தொடங்கிவைக்கப் பிரதமர் மோடி வருகின்ற 24-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமரின் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்துத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில், இன்று காலை சந்தித்துப் பேசினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மற்றும் தமிழக மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான், தமிழ்நாட்டு மக்களின் குறைகளைத் தீர்க்க முடியும். தான் தமிழகத்தின் ஆட்சி ஒழுங்குமுறை குறித்து விமர்சிக்கவில்லை. தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதாகத்தான் குறிப்பிட்டேன் என்று  கூறினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கும், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றியிருந்த நிலையில், பிரதமரின் தமிழக வருகை இரு கட்சியினரையும் சமாதானம் செய்யும் விதமாக அமையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!