வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (20/02/2018)

கடைசி தொடர்பு:16:05 (20/02/2018)

`டார்ச்சர் பண்ணாதீங்க; நாங்களே காலிசெய்கிறோம்' - கலெக்டரிடம் கண்ணீர் விட்ட வியாபாரிகள்

தாயமங்களம் முத்துமாரியம்மன் கோயிலைச் சுற்றி கடைகள் வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், பங்குனித் திருவிழா முடிந்ததும் நாங்களே கடைகளைக் காலிசெய்துகொள்கிறோம் அதுவரை கோயில் நிர்வாகம் எங்களுக்கு டார்ச்சர் கொடுக்காமல் இருக்கச் சொல்லுங்கள்' என மாவட்ட ஆட்சியருக்கு இரண்டாவது முறையாக கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்திருக்கிறார்கள் .

தாயமங்களம் சிறு வியாபாரிகள்


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் அமைந்துள்ளது, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில். இந்தக் கோயிலை நம்பி கோயிலுக்கு வெளியே நூற்றுக்கும் அதிகமான கடைகள் இயங்கிவருகின்றன. பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி ஆடு,கோழிகளைப் பலி கொடுத்துக் கொண்டாடும் அளவுக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.
சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பேசிய ராஜேந்திரன்...
'கோயிலுக்கு வெளியே சிறு சிறு கடைகளையே நாங்கள் நடத்திவருகிறோம். அதில் எந்தக் கடைக்கும் மின் இணைப்பு வசதி கிடையாது. நாங்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களையும் வைத்துத் தொழில் நடத்தவில்லை. இந்தக் கடைகளை நம்பித்தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். முத்துமாரியம்மன் கோயில் டிரஸ்டி, ஜே.சி.பி-யை வைத்துக்கொண்டு கடையை காலிசெய்வேன் என்று எச்சரிக்கிறார். உடனடியாகக் கடைகளைக் காலிசெய்யச் சொன்னால், எப்படி முடியும்? இன்னும் ஒருமாத காலம் அவகாசம் தாருங்கள் எனக் கேட்டிருக்கிறோம்' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க