'5 தமிழர்களும் திட்டமிட்டுக் கொலை!' - ஆந்திர போலீஸ்; வனத்துறைமீது பகீர் குற்றச்சாட்டு

ஆந்திரா ஏரி

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒட்டிமெட்டா ஏரியில், அழுகிய நிலையில் மிதந்துகொண்டிருந்த கருமந்துறையைச் சேர்ந்த மலைவாழ் மக்களை ஆந்திர வனத்துறையினரும், காவல்துறையினரும் திட்டமிட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்கிறார்கள், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுபற்றி, மதுரை மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த செந்தில்ராஜா, 'இச்சம்பவம் கேள்விப்பட்டதும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள செந்தில்ராஜாசம்பவம் நிகழ்ந்த ஏரியையும், அங்கிருக்கும் மக்களிடமும் முழுமையாக விசாரித்தோம். ஏரி, ரோட்டோரத்திலேயே இருக்கிறது. ஏரி ஆழமானதும் இல்லை. இறந்தவர்களின் உடல் அருகே மர்மமான ஒரு மூட்டை கிடந்தது. மலைசாதி மக்களுக்கு நன்றாக நீச்சல் தெரியும். அதன் அடிப்படையிலும், அங்கிருந்த மக்களிடம் விசாரித்த வகையிலும் இந்த ஐந்து பேரையும் ஆந்திரா வனத்துறையினரும், காவல்துறையினரும் அடித்துத் துன்புறுத்தி,  திட்டமிட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பது உறுதியாகக் கூறமுடிகிறது. அழுகிய நிலையில் தடையங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

இன்று காலை ஒன்டிமெட்டா காவல்நிலையத்துக்கும், கடப்பா ராஜீவ்காந்தி மருத்துவமனை காவல் நிலையமான ரிம்ஸ் யூ.ஜி காவல்நிலைய ஆய்வாளரை சந்தித்து பேசும்போது உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், நேற்று 11.30 மணிக்கே பிரேதப் பரிசோதனை செய்துவிட்டதாகக் கூறினார். இது எந்த விதத்தில் நியாயமானது. உறவினர்கள், உடலை அடையாளம்காட்டிய பிறகு, அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு தானே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். இவை அனைத்தும், திட்டமிட்டு கொலைசெய்திருப்பதை உறுதிசெய்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!