வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (20/02/2018)

கடைசி தொடர்பு:15:11 (20/02/2018)

விசாரணை ஆணையத்தில் ராஜம்மாள் ஆஜர்!

ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

சமையல்காரர் ராஜம்மாள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணைக் கமிஷனில் தினமும் விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் இந்நாள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இதேபோல் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை விவேக்கிடமும் சமீபத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும் ஜெ-யின் தோழி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் உள்ள அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விரைவில் விசாரணை நடத்த உள்ளார். இதற்கிடையே ஜெயலலிதாவின் சமையல்காரராக இருந்த ராஜம்மாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ராஜம்மாள் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனை செல்லும் முன், அவரது வீட்டில் என்ன நடந்தது குறித்து ராஜம்மாளிடம் நீதிபதி விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க