கீழடி நான்காம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏன்?

கீழடி அகழாய்வு குறித்து சமூக ஆர்வலர்கள் மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறார்கள். இது குறித்து அவர்களிடம் பேசும்போது, 'சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு சார்பில் மூன்று ஆண்டுகள் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் நான்காம் ஆண்டு அகழாய்வுப் பணியை ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல்துறை அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், தமிழக தொல்லியல்துறை நான்காம் ஆண்டு அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.

கீழடி அகழாய்வு பணி மந்தம்

இதனிடையே ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதமானது. தற்போது தமிழக அரசு ரூ.55,00,000 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அகழாய்வு செய்வதற்குரிய நிலம் தர விவசாயிகள் மறுத்து வருகின்றனர். இதனால், மேலும் தாமதமாகிறது. இதில் ஏதாவது ஓர் இடத்தில் அகழாய்வுக்குழிகள் தோண்டி ஆய்வு செய்து நிதியை வீணாக்காமல் பூமிக்கு கீழே புதைந்துள்ள தொல்லியல் எச்சங்களை ரேடார் சிஸ்டம் மூலம் கண்டறியும் ஜி.சி.ஆர்.எஸ் தொழில்நுட்பம்மூலம் ஆய்வு செய்து இடம் தேர்வு செய்த பின்னர் அகழாய்வு மேற்கொள்ள தமிழகத் தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு திட்டமிட்டு கீழடி அகழாய்வுப் பணியை முடக்கம் செய்துவிட்டது. அதனால்தான் தமிழ்மொழியைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று தமிழ்மொழியின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யப்பார்க்கிறது பி.ஜே.பி அரசாங்கம் என்கிறார்கள்.

இதுதொடர்பாகக் கீழடி பிரிவு இயக்குநர் சிவானந்தம் கூறுகையில், ``ஏதாவது ஓர் இடத்தைத் தேர்வு செய்து அகழாய்வு செய்யாமல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் புவியியல்துறை பேராசிரியர் குமாரசாமி தலைமையிலான குழுவினரின் ஜிசிஆர்எஸ் (கிரவுண்ட் கனெக்ரேட்டிங்ரேடார் சிஸ்டம்) தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்த பின்னர், இடம் தேர்வு செய்யப்படும். அதற்குப் பின் இம்மாதமே அகழாய்வுப் பணிகள் தொடங்கும்'' என்றார்.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!