`களம் காணுது சாமி, இனி நல்லா இருக்கும் இந்தப் பூமி!' - அதகளப்படுத்தும் கமல் ரசிகர்கள் | fans are keen to see actor Kamal's party launch

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (21/02/2018)

கடைசி தொடர்பு:10:56 (21/02/2018)

`களம் காணுது சாமி, இனி நல்லா இருக்கும் இந்தப் பூமி!' - அதகளப்படுத்தும் கமல் ரசிகர்கள்

நடிகர் கமல், அரசியல் பயணத்தை இன்று தொடங்க உள்ளார். இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் ஆர்வத்தோடு மதுரையை நோக்கி கிளம்புகின்றனர்.

கமல்

கமல்ஹாசன்  இன்று மாலை 6 மணியளவில் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து, கட்சிக் கொடியை ஏற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்க உள்ளது. கமலின் அரசியல் வருகையை அவரின் திருச்சி ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இதனால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே சுவர் விளம்பரம் செய்வதில் தொடங்கி, 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் விளம்பரம், ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து அதகளப்படுத்தியுள்ளனர்.

கமல் ரசிகர்கள்

கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அமைச்சர்கள்மீது விமர்சனங்களைக் கூறிவந்தபோது எழுந்த சர்ச்சையில், திருச்சி ரசிகர்கள் இ-போஸ்ட் மூலம் அவரை அரசியலுக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஆரம்பம் முதலே திருச்சியில் ரஜினி ரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் இடையே போட்டி கலகலக்கும்.

சமீபத்தில், திருச்சி வழியாக இயக்குநர் கே.பாலசந்தரின் சொந்த ஊரான நன்னிலத்துக்கு கமல்ஹாசன் செல்வதாக இருந்தபோது,  'நன்னிலம் செல்லும் நல்லவரே', 'தமிழர்களின் வருங்காலமே வருக!' 'தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியசாலியே வருக!' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இப்போது, கமல் அரசியல் பயணம் துவங்குவதால் திருச்சி ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.  அவரின் அரசியல் பயணத்தை வரவேற்று திருச்சி ரசிகர்கள், திருச்சியிலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் தீபம் ஏந்தியபடி ஓட்டத்தைத் தொடங்கினர். அதேவேகத்தில் திருச்சி முழுக்க, ` நாளை நமதே', 'அரசியல் மாற்றம்', 'கர்ப்பகிரகம் விட்டு சாமி வெளியே வருகிறது. இனி எல்லோருக்கும் நல்லகாலம்தான்' என்றும், `களம் காணுது சாமி, இனி நல்லா இருக்கும் இந்த பூமி' என்பது உள்ளிட்ட போஸ்டர்கள் திருச்சி நகர் முழுக்க பளபளக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க