437 படிகள்! - மலைக்கோட்டையின் உச்சிக்கு மளமளவென ஏறிய ஆளுநர்!

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள திருச்சி வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார்.
 
ஆளுநர் பன்வாரிலால்
 

 இன்று  காலை 6.30 மணியளவில் அங்கிருந்து கிளம்பி, திருச்சி மலைக்கோட்டைக்கு வந்து தாயுமானவர் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்தவர், சட்டென மலைக்கு மேலே உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலைப் பார்க்கக் கிளம்பினார். 

ஆளுநர்
273 அடி உயரத்தில் உள்ள மலைக்கோட்டையின் உச்சிப் பிள்ளையார் சந்நிதிக்குப் போக, கீழிருந்து 437 படிகள் ஏற வேண்டும் என்பதால், லோக்கல் போலீஸார் பதறிப்போனார்கள். ஆனால், ஆளுநர் பன்வாரிலால் பதற்றம் இல்லாமல் படியேறத் துவங்கினார். மூச்சிரைத்தபோது, ஆங்காங்கே அமர்ந்து மீண்டும் படியேறினார். 

இறுதியாக, மலைக்கு மேலுள்ள பிள்ளையார் கோயிலில் தரிசனம் முடித்துக் கிளம்பிய ஆளுநர், அப்பகுதியில் இருந்த மாணவர்கள் சிலருடன் கை குலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அங்கிருந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். இறுதியாகப் பத்திரிகையாளர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டவர், அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

ஆளுநர்
பன்வாரிலால், இன்று மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதால், திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!