ஜிசாட் -11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவது எப்போது? இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் | with in two months,GSAT-11 Communication Satellite will be launched - ISRO chief Sivan

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (21/02/2018)

கடைசி தொடர்பு:11:25 (21/02/2018)

ஜிசாட் -11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவது எப்போது? இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

'ஜிசாட் -11 செயற்கைக்கோள் இன்னும் இரண்டு மாதங்களில் விண்ணில் செலுத்தப்படும்' என்று கூறுகிறார் இஸ்ரோ தலைவர் சிவன்.

இஸ்ரோ சிவன்

விமானம்மூலம்  இன்று திருச்சி வந்திருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் சிவன், 'இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தற்போது, இணையதள சேவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஜிசாட்-11 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த  ஜிசாட் -11 செயற்கைக்கோள்மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இணைய சேவை விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. 6 டன் எடைகொண்ட இந்த செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்து அனுப்ப இயலாது. அமெரிக்கா வடிவமைத்துள்ள பிரெஞ்ச் ஏரியன் 5 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அதிக எடைகொண்ட செயற்கைக்கோளாக இருப்பதால், பெரிய ராக்கெட்டான பிரெஞ்ச் ஏரியன் 5 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜிசாட் -11 செயற்கைக்கோள், வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விண்ணில் ஏவப்படும். இதன்மூலம் இந்திய கிராமப்புற அகண்ட அலைவரிசை இணைப்பு இன்னும் அதிவேகமாகச் செயல்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார்துறை ஊழியர்களைப் பணியமர்த்துவதால், செயற்கைக்கோள் செலுத்துவதில் தோல்வி  ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்ட 158 புதிய திட்டங்களில் 126 திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன. மீதமுள்ள திட்டங்களும் விரைந்து முடிக்கப்படும்' என்றார்.