வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (21/02/2018)

கடைசி தொடர்பு:13:45 (21/02/2018)

மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய டிராஃபிக் காவலர்! வைரலாகும் வீடியோ

கோவையில் டிராஃபிக் போலீஸ் ஒருவர் களத்தில் இறங்கி சாலையில் இருக்கும் பள்ளத்தை மண்போட்டு மூடும் வீடியோ வைரலாகி வருகிறது.

traffic constable
 

கோவை நீதிமன்றம் எதிரே உள்ள சாலையில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டிய பிறகு மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நெரிசலாகத் தேங்கி நின்றன. போக்குவரத்தை சீர் செய்ய சற்றும் தாமதிக்காத டிராஃபிக் போலீஸ் ஒருவர் மண்வெட்டியுடன் களத்தில் இறங்கி மண்ணை நிரப்பி பள்ளத்தை மூடினார். பின்னர் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது. டிராஃபிக் போலீஸின் இச்செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க