மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்துக்குத் தடை வருமா? உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மானிய விலை ஸ்கூட்டருக்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாெடரப்பட்டுள்ளது.

மானிய விலை ஸ்கூட்டர் - உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " 50% மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்தத் திட்டத்தில் பயன்பெறுபவர்களிடம் 50 % சதவிகிதம் வரை பணம் கட்ட தகுதி உடையவர்கள் என்றால் அவர்கள் பொருளாதாரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள் அல்ல .

இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் அல்லது 25,000 இதில் குறைவான பணம் வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் அரசுக்கு ரூ.250 கோடி வரை செலவாகும். நடப்பாண்டில் ஒரு லட்சம் வாகனங்களைப் பெற 3,36,104 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை பழைய இலவசத் திட்டங்களைத் தொடரவும், புதிய இலவசத் திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது. அதுவரை 50 சதவிகித மானிய விலைக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!