புதுச்சேரிக்கும் நிர்வாகிகளை அறிவித்தார் ரஜினி!

புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்றத்துக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கான அறிவிப்பை ரஜினி இன்று வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டிருந்தார். அப்போது தனிக்கட்சி தொடங்கி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதையடுத்து ரஜினி மக்கள் மன்றங்களில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. தொடர்ந்து வேலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். புதுச்சேரியிலும் அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 28-ம் தேதி மணக்குள விநாயகர் கோயிலில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை சுமார் 1.8 லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கின்றனர் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்துக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியலை அகில இந்திய தலைமை ரஜினி ரசிகர் மன்றம் இன்று வெளியிடுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநில ரஜினி மன்றப் பொறுப்பாளராக ரஜினி சங்கர், செயலாளராகப் பிரபாகரன், மாநில இணைச் செயலாளராக ஜோதி, துணைச் செயலாளர்களாக யுவராஜ் மற்றும் காத்தவராயன் நெப்போலியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!