வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (22/02/2018)

கடைசி தொடர்பு:10:54 (22/02/2018)

இன்று ப்ளஸ் டூ மாணவர்களுக்கு `ஹால் டிக்கெட்'

ப்ளஸ் டூ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தங்கள் பள்ளிகளில் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். 

plus 2 hall ticket
 

தமிழகப் பாடத்திட்டத்தில், பிளஸ் டூ மாணவர்களுக்கு வருகிற மார்ச் 1-ம் தேதி தேர்வு துவங்குகிறது. ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்குகிறது. இதே போன்று பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்குகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வெழுத உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பில் ‘தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று (21.2.2018) ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. தலைமை ஆசிரியர்கள், வரும் 26-ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.பிப்ரவரி  26-க்குப் பின், ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க