மின்சார ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது..!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் மின்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது.

2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. இந்த நிலையில் இதைக் கண்டித்து கடந்த மாதம் 23-ம் தேதி சி.ஐ.டி.யு மற்றும் பி.எம்.எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலாளர்கள் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலை நீடித்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை, தமிழக அரசு 2.57 காரணி ஊதிய உயர்வு அளிக்க ஒப்புக்கொண்டது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்தநிலையில், இன்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்கழகத் தலைவர் சாய்குமார் முன்னிலையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், '2015-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் 90,000 பேருக்கு இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!