`அன்புசெழியன் விவகாரம்!’ - நடிகர் சசிகுமார் புதிய மனு

அன்புசெழியன் விசாரணை மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் நடிகர் சசிகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நவம்பர் மாதம் 21-ம் தேதி அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு ஃபைனான்ஸியர் அன்புசெழியன்தான் காரணம் என்று அசோக் குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து அசோக் குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக காவல்துறையினர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புசெழியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் காவல்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், அன்புசெழியன் விசாரணை மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகுமார் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!