வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (23/02/2018)

கடைசி தொடர்பு:10:33 (23/02/2018)

`சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சாலை வசதி கேட்டு சாலை மறியல்'!

 

lawyers-in-sivaganga-request-road-access

சிவகங்கையில் குண்டும் குழியுமான சாலையை அப்புறப்படுத்தி புதிய சாலை வசதியை ஏற்படுத்தி தருமாறு வழக்கறிஞர்கள் இன்று  (22-02-18)சாலை மறியலில் ஈடுபட் டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து வழக்கறிஞர்கள் பேசும் போது,

'சிவகங்கை நீதிமன்றம் புதூரில் இருந்து காஞ்சரங்கால் வரை செல்லும் சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. நீதிமன்றத்தை சுற்றி மகளீர் கலைக்கல்லூரி , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ,ரயில் நிலையம் ,அரசு அலுவலகங்கள் செல்லுவோர் எல்லாம் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களாக  இந்த சாலையை சீர்படுத்தி தரக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு பல முறை மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக  வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்  சாலைமறியல் செய்வதுயென முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று வழக்கறிஞர்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கிறோம்.

     எங்கள் போராட்டத்திற்கு  ஆதரவாக  சி.பி.எம்,சி.பி.ஐ காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள்  ஆதரவளித்தார்கள். 

   நீதிமன்றத்தில் இருந்து பஸ் நிலையம் வரைக்கும் ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்பு மூன்று மணி நேரமாக  சாலை மறியலில் ஈடுபட்டோம். இதற்கிடையில் ,டி.எஸ்.பி மங்களேஸ்வரன், கோட்டாச்சியர் சுந்தரமூர்த்தி ,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகாங்கீர்ஆகியோர் பதினைந்து தினங்களுக்குள் புதிய  சாலை போடும் பணி துவங்கப்படும் என உத்தரவு நகல் கொடுத்த பிறகே சாலை மறியலை கைவிட்டிருக்கிறோம் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க