வந்தாள் அபயாம்பிகா! - மயிலாடுதுறையில் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்துகொண்ட பின் ஊர் திரும்பிய மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயில் யானை அபயாம்பிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

தமிழகத்தில், திருக்கோயில் யானைகளின் நலனுக்காக, ஆண்டு தோறும் கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.  கடந்த ஜனவரி 4-ம் தேதி துவங்கிய இந்த முகாமிற்கு கோயில் யானைகள் கொண்டுசெல்லப்பட்டன.  இதில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகாவும் கலந்துகொண்டது. முகாம் முடிந்து மயிலாடுதுறை கோயிலுக்கு வந்து சேர்ந்தது.  மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  அதன் பின், அபயாம்பிகாவுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட் ஷவரில் ஆனந்தக் குளியல் போட்டது.  

யானைப் பாகன் செந்திலிடம் பேசியபோது, ”கோயில் யானைகளுக்கு இயற்கையான சூழ்நிலையில் சுமார் 48 நாள்கள் நடந்த இந்த முகாம் மிகவும் அவசியமானது.  தினமும் மருத்துவப் பரிசோதனை, சத்துணவு, மற்ற யானைகளுடன் பழகுதல், நடைப்பயிற்சி முதலியவை அளிக்கப்பட்டன.  தற்போது, அபயாம்பிகா நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் உள்ளது.  உற்சாகத்துடன் ஊர் திருப்பியுள்ள அபயாம்பிகாவிடம் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் பெற்றுச்செல்கின்றனர்” என்றார்.  
  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!