வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (23/02/2018)

கடைசி தொடர்பு:13:01 (23/02/2018)

``ஸ்லீப்பர் செல்கள் எங்கே இருக்கிறார்கள்?'' - ஜெயக்குமாரின் அடடே பதில்

''எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாங்கள் விழிப்பு உணர்வுடன்தான் இருக்கிறோம், டி.டி.வி.தினகரன் தரப்பில்தான் ஸ்லீப்பர் செல்கள் அதிகம் இருக்கிறார்கள்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Minister Jayakumar

டி.டி.வி.தினகரனை திடீரென இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, `சசிகலா பக்கம் சீக்கிரம் வாருங்கள்' என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கு, அ.தி.மு.க அணியில் சில அமைச்சர்கள் தடையாக இருக்கிறார்கள். அதனால்தான், டி.டி.வி.தினகரன் அணி பக்கம் இணைந்துள்ளதாகக் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன்தான் இருக்கிறது. எங்கள் தரப்பில் உள்ள அனைவரும் விழிப்பு உணர்வுடன் இருக்கிறோம். டி.டி.வி.தினகரன் தரப்பில்தான் அதிகமான ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர், எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் கிடையாது'' என்றார்.