வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (23/02/2018)

கடைசி தொடர்பு:15:15 (23/02/2018)

``மற்றவர்கள் சத்தம்போட்டால் போடட்டும்... அஸ்திவாரம் ஸ்ட்ராங்கா இருக்கணும்!’' - ரஜினி அட்வைஸ்

அரசியல் கட்சி தொடங்குவது என்பது சாதாரணம் இல்லை. அதற்குக் கட்டமைப்பு மிக முக்கியம் என்று தனது மக்கள் மன்ற ரசிகர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினி தெரிவித்துள்ளார். 

political party

ரஜினியின் நெல்லை மாவட்ட மக்கள்மன்றரசிகர்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ரஜினி, 'ஒரு குடும்பம் நன்றாக இருக்க குடும்பத் தலைவன் சரியாக இருக்க வேண்டும். நான் குடும்பத் தலைவனாக எனது பொறுப்பில் சாரியாக உள்ளேன். மேலும், தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, நான் கட்டிக்கொண்டு வரும் 32 அடுக்கு மாடிக் கட்டடத்துக்கு, அரசியல் அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டும். அதனால், மற்றவர்கள் சத்தம்போட்டால் போடட்டும், நாம் அமைதியாக நமது வேளையைப் பார்ப்போம்' என்றார். 

கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி அன்று தனது ஆன்மிக அரசியல் பயணத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினி, தனிக்கட்சி தொடங்கி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தனது ரசிகர்மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணியில் இணையதளம் ஒன்றை உருவாக்கினார். அதுமட்டுமின்றி, ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ராஜு மகாலிங்கம் மற்றும் சுதாகரன் தலைமையில், மாவட்டங்கள் வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.