பெரியபாண்டியன் விவகாரம்! தென்மாவட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் டிரான்ஸ்ஃபர் 

ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இன்ஸ்பெக்டர் முனிசேகர்

சென்னையில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த டிசம்பர் மாதம் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் சென்றது. ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமுடன் ஏற்பட்ட மோதலில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து இறந்தார். மேலும் இதில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் காயமடைந்தனர். பெரியபாண்டியனை ராஜஸ்தான் கொள்ளையர்கள் சுட்டுவிட்டதாகத் தகவல் பரவியது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெய்த்ரன் போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டார் எனத் தெரிவிக்க அதைத் தமிழகக் காவல்துறையும் உறுதி செய்தது. இந்த நிலையில், முனிசேகரைப் பணியிட மாற்றம் செய்து தமிழகக் காவல்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர் காவல் ஆய்வாளராக இருந்த அவர் தற்போது தென்மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் உட்பட 6 ஆய்வாளர்களை இடம் மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!