அரசே விரும்பாத ’அம்மா குடிநீர்’ - நாளை ஜூனியர் விகடனில்..!

அம்மா குடிநீர்

முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு அம்மா குடிநீர் விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி நாட்டிலேயே முதன் முறையாக குடிநீர்பாட்டில்களை விற்பனை செய்யும் மாநிலம் என்ற பெயரை தமிழகம் பெற்றது. தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டம் குறித்து விகடன் ஆர்.டி.ஐ குழு தகவல்களை சேகரித்தது.
மக்களுக்கு மிகவும் மலிவு விலையில் குடிநீர் கிடைக்கும் திட்டத்தின் இப்போதைய நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது. திட்டத்தை விரிவு படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அரசு விழாக்களுக்குத் தனியார் நிறுவனங்களிலிருந்து குடிநீர் பாட்டில் வாங்குகிறார்கள். அம்மா பாட்டில் வாங்கப்படுவதில்லை. இது குறித்து நாளை வெளியாகும் ஜூனியர் விகடனின் 28-02-18 தேதியிட்ட இதழில் விரிவான கட்டுரை வெளியாகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!