வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (23/02/2018)

கடைசி தொடர்பு:17:12 (23/02/2018)

ரஜினியின் அடுத்த படம்..! - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

'காலா', '2.0' படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

ரஜினி

ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் அடுத்து அவர் நேரடியான அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்தது. தனுஷ் தயாரித்துள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகுமென்று தயாரிப்பு நிர்வாகத்திடமிருந்து அறிவிப்பு வந்துள்ளது. மேலும், ஷங்கர் இயக்கியிருக்கும் '2.0' படமும் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் ஷூட்டிங் பற்றிய எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகாத நிலையில், ரஜினியின் அரசியல் பயணம் எப்போது இருக்கும் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க