”அவல நிலையில் எம்.ஜி.ஆர் தொடங்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்!” - அதிர வைக்கும் ஆர்.டி.ஐ. தகவல்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

தமிழகத்தில் உயர்கல்வியில் பெரும்பாலும் ஆங்கிலம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையை மாற்றி தமிழில் புதிய கலைச் சொற்கள் உருவாக்கவும், பாடத்திட்டங்களை உருவாக்கவும், எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு திட்டமிட்டது. இந்த நோக்கத்துடன்தான் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் 1981-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது.
இப்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நிலை சொல்லும்படியாக இல்லை. விகடன் ஆர்.டி.ஐ குழு இது தொடர்பாக தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல்கள் பெற்றது. தமிழுக்காகத் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் இன்றைக்கு அவல நிலையில் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., வழியைப் பின்பற்றி ஆட்சி நடத்துவதாகக் கூறும் அ.தி.மு.க அரசு இதற்காக என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது.  இந்த தகவல்கள் அடங்கிய கட்டுரையை  28-02-18 தேதியிட்டு நாளை சனிக்கிழமை வெளியாகும் ஜூனியர் விகடன் இதழில் படிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!