வீட்டுக்குள் புகுந்து போலீஸ் சோதனை! டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம் | cops search Kejriwal’s residence, seize recording of 21 CCTV cameras

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (23/02/2018)

கடைசி தொடர்பு:19:40 (23/02/2018)

வீட்டுக்குள் புகுந்து போலீஸ் சோதனை! டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்

டெல்லி தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்ட வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் புகுந்து டெல்லி போலீஸார் சோதனை நடத்தினர்.

கெஜ்ரிவால் வீட்டில் டெல்லி போலீஸ்

சோதனையில் வீட்டுக்குள் பொருத்தப்பட்டிருந்த 21 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்கு-களை கைப்பற்றிக்கொண்டு சென்றனர். சைபர் க்ரைம் பிரிவு, தடயவியல் பிரிவு நிபுணர்களுடன் 60-க்கும் மேற்பட்ட போலீஸார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். டெல்லி மாநில வரலாற்றில் முதல்வரின் இல்லத்துக்குள் புகுந்து போலீஸார் சோதனை நடத்துவது இதுதான் முதல்முறை. சுமார் 40 நிமிடம் இந்தச் சோதனை நடைபெற்றது. 

தலைமைச் செயலரைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட ஆம்ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் அமானுல்லாகான், பிரகாஷ் ஜார்வல் ஆகியோர் ஏற்கெனவே 14 நாள்கள் ரிமான்டில் வைக்கப்பட்டுள்ளனர். இருவரது ஜாமீன் மனுவையும் டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. டெல்லியில் ஜனநாயகத்தைக் கொலை செய்துவிட்டதாக ஆம்ஆத்மி கட்சி கொந்தளித்துள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால் செய்துள்ள ட்வீட்டில், 'என் வீட்டில் சோதனை நடத்தியதுபோல நீதிபதி லோயா மரண விவகாரத்தில் அமித்ஷா வீட்டை சோதனையிட போலீஸ் முன் வருமா' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த திங்கள்கிழமை இரவு அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அன்சு பிரகாஷை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அமனதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால், கெஜ்ரிவால் முன்னிலையிலேயே தாக்கியுள்ளனர். டெல்லி மாநிலத் துணைநிலை ஆளுநர் அனில் பைஜலிடம் அன்சு பிரகாஷ் புகார் அளித்தர். அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ-க்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க