வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (23/02/2018)

கடைசி தொடர்பு:18:36 (23/02/2018)

களைகட்டியது கச்சத் தீவு திருவிழா!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

katchatheevu

இந்திய ராமேஸ்வர மீனவர்கள் கொண்டு வந்த 40 அடி உயரம் தேக்குக் கொடிமரத்தில், நெடுந்தீது பங்குத்தந்தை ’எமில் பால்’ கொடியினை ஏற்றி வைத்தார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பக்தர்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தலைமன்னார் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த இலங்கை பக்தர்களும் கலந்து கொண்டனர். 

katchatheevu

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்புத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இத்திருவிழாவில் தீருச் சிலுவை பாவை நிகழ்வும், தேர்பவனியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது வருகின்றன. 

இவ்விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 62 விசைப்படகுகளில் கச்சத்தீவுக்கு வந்தடைந்தனர். மேலும், புனித அந்தோணியார் ஆலயத்துக்குத் தமிழக பக்தர்களின் காணிக்கையாக, சுமார் 2,00,000 மதிப்புடைய 40 அடி உயரமுள்ள தேக்குக் கொடிமரம் வழங்கினர்.