`ஆந்திராவில் இறந்த 5 பேர் வழக்கை வன்கொடுமைச் சட்டத்தில் விசாரிக்க வேண்டும்'! பழங்குடியினர் கோரிக்கை

ஆந்திரா- 5 பேர் மரணம்

ஆந்திர வனத்துறை மற்றும் காவல்துறையால் தமிழகப் பழங்குடியினர் 5 பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதற்கு நீதி விசாரணை கோரி தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் (மலையாளி) பேரவை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டார்கள்.

குபேந்திரன்இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளி) பேரவையின் மாநில ஆலோசகர் குபேந்திரன், ''தமிழகப் பழங்குடியினரின் நிலம், வேலைவாய்ப்பு, விவசாயம் வாழ்வாதாரத்தை உறுதி செய்யப்பட வேண்டும். கொல்லப்பட்ட 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட வேண்டும். மற்றும் இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆந்திராவில் கொல்லப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழக்கை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுகை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது போன்ற சம்பவம் நடக்காவண்ணம் அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். பழங்குடியினர் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைக்கும் டாக்டர் சுரேஷ் கமிட்டியின் ஆலோசனைகளை உடனே அமல்படுத்த வேண்டும். பழங்குடியின மக்களை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லும் புரோக்கர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!