அடுத்தடுத்து வங்கி மோசடியில் சிக்கும் வைர வியாபாரிகள் - மீண்டும் ஒரு வங்கி மோசடி

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்து விசாரணை நடந்துவரும் இந்நிலையில், ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியிலும் மோசடி முறைகேடுகள் நடந்துள்ளன என்று சி.பி.ஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மோசடி

இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.11,400 கோடி கடன் பெற்று, அதற்கான வட்டி மற்றும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக நிரவ் மோடிமீது, பஞ்சாப் நேஷனல் வங்கி சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஐ.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியின் வங்கி மோசடியால், பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் நஷ்டத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது. 

இந்நிலையில் டெல்லி துவரகா தாஸ் சேத் இன்டர்நேஷனல் நிறுவன இயக்குநர்கள் பொதுத்துறை வங்கியான, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் ரூ.390 கோடி மோசடி செய்துள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களாக ஓரியன்டல் வங்கி அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் சி.பி.ஐ தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.     

தங்கம் மற்றும் வைர நகை வியாபாரம் செய்து வரும் சப்யா சேத், ரீடா சேத், கிருஷ்ணகுமார் சிங், ரவி குமார் சிங் ஆகிய 4 பேர் மீதும் அவர்களது நிறுவனம் துவரகா தாஸ் சேத் இன்டர்நேஷனல் நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!