நெடுஞ்சாலையைக் கடந்த பள்ளிக்குழந்தைகள் மீது மோதிய அதிவேக வாகனம்! 9 குழந்தைகள் உயிரிழப்பு | 9 school children die in road accident in Bihar

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (24/02/2018)

கடைசி தொடர்பு:20:44 (24/02/2018)

நெடுஞ்சாலையைக் கடந்த பள்ளிக்குழந்தைகள் மீது மோதிய அதிவேக வாகனம்! 9 குழந்தைகள் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில், பள்ளி வகுப்பு முடிந்து வெளியேறிக்கொண்டிருந்த குழந்தைகள்மீது, வாகனம் ஒன்று மோதியதில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 14 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பீகார்

Photo: ANI

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள், வகுப்பு முடிந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துகொண்டிருந்தனர். அப்போது, சாலையில் வந்துகொண்டிருந்த வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள்மீது மோதியது.  

கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனத்தின், சக்கரத்தில் பல மாணவர்கள், நோடி பொழுதில் சிக்கி உயிருக்குப் போராடினர். விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெமோரியல் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கொண்டு செல்லும் வழியில் ஒன்பது மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பீகார்

Photo: ANI

விபத்தில் சிக்கிய மாணவர்களை அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மெமோரியல் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கொண்டு செல்லும் வழியில் ஒன்பது மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த இறங்கலை நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினர்க்கு தலா 4 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார். 
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.