ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தாய் சேய் நல மருத்துவ முகாம்!

மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் நடைபெற்ற தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாமை பொறுப்பாட்சியர் ச.சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 

   

கரூர் நகராட்சி மருத்துவமனை கஸ்தூரிபாய் தாய்-சேய் நலப்பிரிவில் சுகாதாரத்துறையின் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் நடைபெற்ற தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாமினை சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய கரூர் மாவட்ட பொறுப்பாட்சியர் சூர்யபிரகாஷ்,"மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 தாய்-சேய் மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்று (24.02.2018) கஸ்தூரிபாய் தாய்-சேய் நல சிறப்பு முகாமினை தொடங்கி
வைத்திருக்கிறோம். இதனைத்தொடர்ந்து,27.02.2018 அன்று காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 02.03.2018 பாப்பாகாபட்டி,சமுதாயக்கூடத்திலும்,03.03.2018 அன்று உப்பிடமங்கலம்,சமுதாயக்கூடத்திலும்,05.03.2018 அன்று கோட்டமேடு துணைசுகாதார நிலையத்திலும், 05.03.2018 அன்று சின்னதாராபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 06.03.2018 அன்று தோகைமலை,அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,06.03.2018 அன்று மலைக்கோவிலூர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாம்களில்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை செய்தல் மற்றும் ரணஜன்னி தடுப்பூசி போடுதல்,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் (இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்தல்), கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பார்த்தல்,டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நிதியதவிபெற விண்ணப்பம் அளித்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறுதல்,தாய்சேய் நல பணிகள் தொடர்பாக துண்டு பிரசுரம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்" என்றார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!