அறிவியலில் அசத்தும் 6 வயது சிறுவன்!- பாராட்டு குவிகிறது

உலக சாதனை 

திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் பிரியதர்ஷினி தம்பதியின் மகன் சர்வேஷ். ஆறு வயதே ஆன இந்த சிறுவனுக்கு பல்வேறு சிறப்பு திறமைகள் இயற்கையிலேயே இருந்திருக்கிறது. இவர் கண்ணைக் கட்டிக்கொண்ட நிலையில் வாசனையை நுகர்ந்து மசாலா பொருட்களின் பெயரைச் சொல்லுவார். நீச்சல் குளத்தில் ஒரே இடத்தில் அதிக நேரம் மிதப்பார். இவரது தனித்திறமையை பெற்றோர்கள் ஊக்குவித்தனர்.  தேனியைச்  சேர்ந்த நினைவாற்றல் பயிற்சியாளர் நக்ஷத்திரா மூலம் பயிற்சி அளித்தனர். 

இதன் காரணமாக கடந்த ஆண்டு, அறிவியல் சார்ந்த 200 கருவிகளை ஐந்து நிமிடத்தில் அடையாளம் காண்பித்து உலக சாதனை புரிந்தார்.  இவரது சாதனையை பாராட்டி கடந்த டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஸ்பந்தன் இன்டர்நேஷனல் அகாடமி இவருக்கு கிட்ஸ் ஆப் இந்தியா என்ற விருதை வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (24-02-18) திண்டுக்கல்லில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மூன்று நிமிடம் 57 விநாடிகளில் 125 வேதியியல் மூலக்கூறுகளின் கட்டமைப்புகளை அடையாளம் கூறி உலக சாதனை படைத்தார். இந்த பிரிவில் இதுவரை யாரும் உலக சாதனை நிகழ்த்தவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது. 

சேம்பியன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் நடுவர் அங்கப்பன் மற்றும் திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!