வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (25/02/2018)

கடைசி தொடர்பு:16:30 (25/02/2018)

'அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது' - ஸ்ரீதேவி மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது வருத்தம் அளிக்கிறது என ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த்

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார். சினிமாவில் பல்வேறு நடிகைகள் வந்து போனாலும், ரசிகர்களின் நீண்டகாலமாக கோலோச்சி இருக்கும் வாய்ப்பு சிலருக்கு தான் கிடைக்கும். அவ்வாறு தனது நடிப்பு திறமையாலும், அழகாலும் இந்திய ரசிகர்களை மயக்கிவைத்திருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தொடக்கத்தில் தென்னிந்திய நடிகையாக அறியப்பட்ட இவர், தனது திறமையால் பிற்காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்த்திருந்தார். இதனால் இவரது மறைவு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு என்பதை மறுக்கமுடியாது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "காலையில தான் அவர் இறந்த செய்தி தெரிஞ்சது. ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. என்னால இப்போ கூட நம்ப முடியல. 40 வருஷமா எனக்கு அவரை தெரியும். எனது மிக நெருங்கிய நண்பரை இழந்தது வருத்தமா இருக்கு. எனக்கு இருக்கிற சில நண்பர்களில் முக்கியமானவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன். போனிகபூர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்னோட இரண்டாவது படத்துல இருந்து 16 படம் அவங்ககூட நடிச்சுருக்கேன். கேமிரா முன்னால வரும் போது மின்னல் வேகத்துல நடிப்பார். யாரிடமும் கோபித்துக்கொள்ள மாட்டார். ஹிந்தி சினிமாவுல நீண்டகாலமாக நடிச்சது எனக்கு ஆச்சிரியத்தை தந்தது. அவர் பிறவிலேயே ஒரு நடிகை. அவரது இறப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க