'எங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்' - சொல்கிறார் தென்னாப்பிரிக்கா கோச்! | India's Experience In Bowling Was The Difference, Says South Africa Coach Ottis Gibson

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (25/02/2018)

கடைசி தொடர்பு:09:00 (26/02/2018)

'எங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்' - சொல்கிறார் தென்னாப்பிரிக்கா கோச்!

இந்தியாவின் அனுபவ பந்துவீச்சு எங்களிடம் இல்லை என தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார். 

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி டி-20 போட்டி கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. இதில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது இந்திய அணி. ஏற்கனவே ஒருநாள் கைப்பற்றியுள்ள நிலையில் டி20 தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் முழுவதும் இந்தியாவின் பேட்டிங், பௌலிங் இரண்டும் சிறப்பாக அமைத்தது தான் வெற்றிக்கு உதவியது. முக்கியமாக இந்திய பௌலர்கள் பிரமாதப்படுத்தினர். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கூட புவனேஷ்வர் குமாரின் நேர்த்தியான பந்துவீச்சே இந்தியா கோப்பையை வெல்ல உதவியது.  

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன், "தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போனதால் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இதனால் புதிய வீரர்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. விரைவாக சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்த முடியவில்லை. இருப்பினும் அவர்கள் முடிந்தவரை போராடினர். பந்துவீச்சில் எங்களுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்திய அணியில் புவனேஷ்வர்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் அனுபவ பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் 4 வருடங்களாக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. இதனால் கடைசி ஓவர்களில் நேர்த்தியாக பந்துவீசி நெருக்கடி தருகின்றனர். எங்களிடம் அவ்வாறு அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லை. இளம் வீரர்களின் வருகையால் கிறிஸ் மோரிஸுக்கான வேலைப்பளு அதிகமாகி விட்டது. அவர் மேட்ச் வின்னர் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் அவரிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க