நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்! | US Consulate condoles Sridevi's death

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (25/02/2018)

கடைசி தொடர்பு:19:03 (25/02/2018)

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்!

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஸ்ரீதேவி

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவு இந்திய சினிமா உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. பல வருடங்களாக தனது நடிப்பால் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து அவர், பத்ம விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். பெண்கள் பலர் நடிக்க தயங்கிய சவாலான வேடங்களில் நடித்த அவரது திடீர் மறைவு அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் முதல் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், ஸ்ரீதேவி மறைவுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், "பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அவரின் திடீர் உயிரிழப்பு கவலையடைய செய்கிறது. அவரின் நடிப்பு உலக ரசிகர்களை தொட்டுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க