'ஜெயலலிதா சிலை விவகாரத்தில் தலைமைக்கழகம் நடவடிக்கை எடுக்கும்' - ஜெயக்குமார் உறுதி!

ஜெயலலிதாவின் உருவச் சிலையில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளார். 

ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திருவுருவச் சிலை திறக்கப்பட்டது. மிகவும் தடபுடலாக நடைபெற்ற விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஒருசேர சிலையை திறந்து வைத்தனர். சிலையை திறந்தவுடன் இதுதொடர்பான மீமீஸ்கள், ட்ரோல்கள் வர தொடங்கின. இதற்கு காரணம், சிலை ஜெயலலிதாவைப் போல் இல்லை என்பது தான். சிலையில் உள்ள முகம் அவரைப் போல் இல்லை என பலரும் கருத்துக்களை பதிவிட, அதுவே ட்ரெண்டானது.

இந்தநிலையில் சிலையில் மாற்றம் செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்றைய தினம் சிலையை திறந்தது அ.தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க விஷயமாகும். சிலை அவரைப் போல் இல்லை என்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வலைத்தளங்களில் வரும் கருத்துக்களின் அடிப்படையில் சிலையில் சில மாற்றங்கள் செய்வதற்கு தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!