"குடும்பங்களில் பெண்கள் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை தன்னால் உயரும்!" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு | "If the level of women in families increases, the country will rise!" Minister's speech!

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (25/02/2018)

கடைசி தொடர்பு:21:30 (25/02/2018)

"குடும்பங்களில் பெண்கள் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை தன்னால் உயரும்!" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

"குடும்பங்களில் பெண்களில் நிலை உயர்ந்தால், நாட்டின் நிலை தானாக உயரும்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

எம் ஆர் விஜயபாஸ்கர் 

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் ஒத்தக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு 216 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேசிய அவர், "இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென ஜெயலலிதா அரும்பாடுபட்ட்டார். இந்த அரசில் உதவிகளை பெறாத மக்களே இல்லாத நிலையை அவர் உருவாக்கினார். அவர்கள் விட்டுச்சென்ற பணியை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வருகிறார். குடும்பத்தில் பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவி, அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கியதை உயர்த்தி, ஒரு பவுன் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், பெண்கள் நிலை உயர வேண்டும் என மடிக்கணினி போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதுபோன்று பல்வேறு திட்டங்கள் மக்களின் நலன் காக்க இதனை அனைவரும் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும். இருக்க இடம், உடுத்த உடை என்ற அடிப்படை வசதிகளை வழங்கிய திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சியில் நீண்ட காலமாக பட்டா இல்லாமல் வசித்து வந்த நிலையை மாற்றி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திருமாநிலையூர், செல்வாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,000 நபர்களுக்கு ரூ.25 கோடி மதிப்பில் பட்டா வழங்கப்பட்டது. இன்றும் 216 நபர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மழை காலத்திற்கு முன்பே நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தடையின்றி பாசனம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. மேலும், இப்பகுதி விளைநிலங்களை கருத்தில் கொண்டு நெரூர் - உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.