காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை..! நிதின் கட்கரி தகவல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்தாய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் அதிகமாக புதிய சாலை திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்' என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய மத்திய அமைச்சர் நதின் கட்கரி, 'சேலம்-சென்னை இடையே பசுமை வழித்தடம் அமைப்பது தொழில்துறைக்கு அவசியமானது. இதன்மூலம் பயண நேரம் 2 மணி நேரம் குறையும். 10,000 கோடி ரூபாயில் சேலம்-சென்னை இடையே பசுமை வழித்தடம் அமைக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!