வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (26/02/2018)

கடைசி தொடர்பு:08:53 (26/02/2018)

நடிகை ஶ்ரீதேவிக்கு மணல்சிற்பம் உருவாக்கியுள்ள சுதர்சன் பட்நாயக்..!

நடிகை ஶ்ரீதேவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்குப் பல அரசியல் தலைவர்களும், தமிழ், இந்தி நடிகர், நடிகைகளும் ட்விட்டர் தளத்திலும், முகநூல் பக்கத்திலும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நடிகை ஶ்ரீதேவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவுக்கும்விதமாக பூரி கடற்கரையில், ஶ்ரீதேவியின் மணல்சிற்பத்தை வரைந்துள்ளார், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். எனது சிறு வயது நாயகிக்கு அஞ்சலி என்று கூறியுள்ள பட்நாயக், தனது சிற்பத்தில் 'RIP Sridevi' என்றும் 'we will miss you' என்றும் எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் ஶ்ரீதேவி. 'உங்கள் இழப்பால் வருந்துகிறோம்' என்று ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். 

ஶ்ரீதேவியின் உடல் நாளை மும்பைக்கு வந்தடையும். நாளை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.