வெளியிடப்பட்ட நேரம்: 07:26 (26/02/2018)

கடைசி தொடர்பு:07:26 (26/02/2018)

ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரையில் ஒரே நாளில் 1304 ஆமை முட்டைகள் சேகரிப்பு..!

தமிழகத்தை யாருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறதுபோல. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1304 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். ராமேஸ்வரமும் தனுஷ்கோடியும் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு ஃபேவரைட்டான இடங்கள். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் சீசன்.  சமீபத்தில் 668 முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்திருந்தனர். ஆனால் நேற்று இரவு மட்டும், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடற்கரையில் 11 கூடுகளிலிருந்து 1304 முட்டைகளைச் சேகரித்துள்ளனர். 

தற்போது வரை கடற்கரையில் உள்ள 76 கூடுகளிலிருந்து 8969 ஆலிவ் ரிட்லி முட்டைகள் கிடைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த முட்டைகள் அனைத்தும் 45 நாள்கள்  பாதுகாக்கப்பட்டு, குஞ்சு பொறிந்ததும் கடலுக்குள் விடப்படும். இதுவரை 507 குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகத் தகவல்.