அழுதக் குழந்தைக்கு தாயால் நேர்ந்த கொடூரம்! - டெல்லியில் பயங்கரம் | mother throws newborn baby in garbage dump

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (26/02/2018)

கடைசி தொடர்பு:12:10 (26/02/2018)

அழுதக் குழந்தைக்கு தாயால் நேர்ந்த கொடூரம்! - டெல்லியில் பயங்கரம்

தனது குழந்தை, தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த தாய், அந்தக் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துள்ளார். டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்.

குப்பைத் தொட்டியில் குழந்தை

டெல்லியில் உள்ள வினோத்பூர் பகுதியைத் தேர்ந்தவர், நேஹா. இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 25 நாள்களே ஆன அந்தக் குழந்தை காணாமல் போனதாக, அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில்,போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். 

அப்பகுதி மக்களிடமும் இது தொடர்பான விசாரணை நடைபெற்றதுவந்தது. குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நாள் அன்று, குழந்தையின் தாய் நேஹா, குப்பைத்தொட்டியில் எதையோ வீசி எறிந்துவிட்டுச் சென்றார் என போலீஸிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து,நேஹாவிடம்  போலீஸார் விசாரணை நடத்தினர். 

தனது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரத்தில் சற்றும் யோசிக்காமல் குப்பைத்தொட்டியில் வீசியதாக அவர்  தெரிவித்தார். குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை போலீஸார் உடனடியாக மீட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தாய் நேஹா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.