வக்பு வாரியத் தேர்தலை நடத்த ம.ஜ.க வலியுறுத்தல் 

வக்பு வாரியம்

'தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும்' என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு இன்று (26.2.2018)  தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரெனத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது. இந்தியாவில் ரயில்வே, ராணுவம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சொத்துக்களைக்கொண்ட மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக வக்பு வாரியம் உள்ளது. மன்னர்கள், பொதுமக்கள் மற்றும் செல்வந்தர்கள், பொதுநல காரியங்களுக்காகவும் இஸ்லாமிய ஆன்மிகப் பணிகளுக்காகவும் தானம்செய்யப்பட்ட சொத்துக்களை தமிழ்நாடு வக்பு வாரியம் பராமரித்துவருகிறது.

இதற்கு, நீண்ட காலமாகத் தலைவர் இல்லாமல் இப்பதால், பல பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்களின் நிர்வாகச் செயல்பாடுகள் முடங்கிக்கிடக்கின்றன. எனவே, இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் கவனம்செலுத்த வேண்டும் என ஜமாத்தினர் எதிர்பார்க்கிறார்கள். உடனடியாக தமிழக அரசு மறு தேதியை அறிவித்து, இத்தேர்தலை நடத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!