தென்மாநில ஆளுநர் ஒருவர்மீது பாலியல் புகார்!

தென்மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர்மீது உள்துறை அமைச்சகத்துக்கு பாலியல் புகார் சென்றுள்ளது. 

ராஜ்பவனில் பணிபுரிந்துவரும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லைகொடுப்பதாக உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு புகார்க் கடிதம் சென்றுள்ளது.  இந்த விவகாரம்குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆளுநர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதற்கான சாட்சியங்களைத் திரட்டிவருகின்றனர். குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக அவர் ராஜினாமாசெய்ய அறிவுறுத்தப்படுவார். 

சம்பந்தப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்படவில்லை. அரசியல் உள்நோக்கம் காரணமாக புகார் சொல்லப்படுகிறதா என்றும், புகாரின் உண்மைத்தன்மைகுறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில், மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் மீது அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாலியல் புகார்கள் சென்றதையடுத்து அவர் ராஜினாமா செய்தார். ராஜ்பவனில் பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், சண்முகநாதன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!