'எனக்கு 2 மனைவிகள்; சம்பளத்தை உயர்த்துங்கள்'- அதிபரின் அடடே கோரிக்கை

தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க தனது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே கோரிக்கை வைத்துள்ளார்.

ரோட்ரிகோ டூர்ட்டே

இதுகுறித்து Inquirer இணையதளத்தில் வெளியான செய்தியில், 

பிலிப்பைன்ஸ், இலொயினா-வில் உள்ள ராணுவ முகாமில் கலந்துகொண்டு பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, ‘நான் வாங்கும் சம்பளம் என் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லை. உணவுக்கான அலவன்ஸ் பணமும் தருவதில்லை. இரண்டு மனைவிகள் இருப்பதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. எனது வேலைச் சுமைகளைக் கணக்கிட்டால், எனக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்பது உங்களுக்குப் புரியும்' என்று பேசியுள்ளார். 

மேலும், நாடு முழுவதும் விமானத்தில் பறந்துசென்று வருவதால், சல்யூட் அடித்தே தனக்கு சோர்வாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தப் பேச்சு, அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர், ரோட்ரிகோ டூர்ட்டே-வுக்கு, தற்போது இந்திய மதிப்பில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. 
 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!