தெருவில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு வாழ்வுகொடுத்த செவிலியர்!

சீனாவில் நடுங்கவைக்கும் குளிரில் பச்சிளம் குழந்தையை நடுரோட்டில் விட்டுச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பச்சிளம் குழந்தை

photo credit: mailonline

சீனாவில் கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனால் சீன மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே கடந்த புதன்கிழமை அன்று சீன - ரஷ்ய எல்லை அருகே உள்ள ஜியாமுஷீ என்ற பகுதியில் பிறந்து சில நாள்களேயான ஆண் குழந்தையைத் தூக்கிவந்த ஒருவன் நள்ளிரவு 1 மணியளவில் தெருவில் அக்குழந்தையை விட்டுச் சென்றான். நள்ளிரவு நேரம் என்பதால் மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் குழந்தை கதறி அழுதுள்ளது. 

சுமார் அரைமணிநேரத்துக்குப் பின்பு அவ்வழியாக மருத்துவமனை செல்வதற்காக வந்த ஆண் செவிலியர் அந்தக் குழந்தையைக் கைப்பற்றி முதலுதவி அளித்துள்ளார். மேலும் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்த செவிலியர் பின்னர், காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு குழந்தையை நடுங்கும் குளிரில் தவிக்கவிட்டுச் சென்ற நபரை போலீஸார் தேடிவருகின்றனர். சீனாவில் குழந்தைகளைத் தெருக்களில் விட்டுச் செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!