`மாவு அரைக்கும் தொழில் செய்கிறோம்' - பேத்திக்காகக் கலெக்டரிடம் சுதந்திரப் போராட்ட வீரரின் மகள் கண்ணீர் மனு!

பேரக்குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கக்கோரி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சுதந்திரப் போராட்ட வீரரின் மகள் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரின் மகள்

கோவை மாவட்டம், வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரிபாய். இவரின் தந்தை ராஜகோபால், சுந்தந்திரப் போராட்டத் தியாகி. மூன்று முறை அலிபுரம், பெல்லாரி, பொள்ளாச்சி ஆகிய சிறைகளில் ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். மத்திய மாநில அரசுகள் வழங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை ராஜகோபால் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கஸ்தூரிபாய் அளித்துள்ள மனுவில், “என் கணவர் மற்றும் மகன் ஆகியோரும் உயிரிழந்துவிட்டனர். தற்போது, இரண்டு பேரக்குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளேன். மாவு அரைத்துத்தான் என் பேத்தியை எம்.ஏ ஆங்கிலமும் பேரனை ஏழாம் வகுப்பும் படிக்க வைத்து வந்தேன். மாவு விற்பனை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து இருவரையும் படிக்க வைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, பேத்தியின் படிப்பை நிறுத்திவிட்டேன். தற்போது என் பேத்தியும் மாவு அரைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எனக்கு வயதாகிவிட்ட காரணத்தால், பேத்தி வித்யஸ்ரீக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்” என்றுள்ளார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!