வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (27/02/2018)

கடைசி தொடர்பு:04:30 (27/02/2018)

தடியடி நடத்திய ஏ.எஸ்.பி.ஐ பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சய்யினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாட்டில் செந்தொண்டர் அணிவகுப்பில் சென்ட்ரிங் கட்டையால் தடியடி நடத்திய ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினம் மற்றும் காவலர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Marxsiat

மாநாட்டின் 4வது நாள் மாலை தூத்துக்குடி வி.வி.டி சிக்னலில் இருந்து மாநாடு நடைபெற்ற சங்கரப்பேரி வரை 8 கி.மீ தூரம் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளும் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பேரணி சென்று கொண்டிருக்கும்போது போலீசார், சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சில வாகனங்களை அனுமதித்தனர். அப்போது செந்தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில், ஏ.எஸ்.பி மற்றும் சில காவலர்கள் அருகில் இருந்த சென்ட்ரிங் கட்டைகளை தூக்கி திடீர் தடியடி நடத்தியதில், 5  வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். செந்தொண்டர்கள் போலீசாரை சுற்றிட ஓட்டம் பிடித்தார் "தடியடி" ஏ.எஸ்.பி.

இதற்கு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடத்தப்பட்டதற்கு அடுத்தநாள் எஸ்.பி.மகேந்திரனிடம், ஏ.எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்ய வேண்டும் என்பதைதான் முக்கியமாக குறிப்பிட்டு புகார் மனு அளித்தனர். ஏ.எஸ்.பி.ஐக் கண்டித்து மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனின் அறிவிப்பு படி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

Kanagaraj

தூத்துக்குடியில் நேற்று(26.02.17) மாலை மீண்டும் கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ், " செந்தொண்டர்களைத் தாக்கிய ஏ.எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என டி.ஜி.பி.யிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். தூத்துக்குடிக்கு இவர் வந்த நாள் முதல் பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டே வருகிறார். செந்தொண்டர்கள் மீது காரணம் இல்லாமல் போடப்பட்ட பொய்வழக்கினை ரத்து செய்ய வேண்டும். தடியடியில் ஈடுபட்ட ஏ.எஸ்.பி மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் இணைந்து காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்." என்றார். ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க