வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (27/02/2018)

கடைசி தொடர்பு:05:00 (27/02/2018)

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 79 ஜோடி மணமக்களுக்கு திருமணம்..!

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு 79 ஜோடி மணமக்களுக்கு அமைச்சர் காமராஜ் தலைமையில் திருமணம் நடந்தது.  

திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விரிவான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து மத ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க கொடியேற்றுதல், மாணவ, மாணவிகளுக்கு குறிப்பேடு, எழுதுகோல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராமங்களில் இலவச வேட்டி, சேலை வழங்குதல், மரக்கன்று நடுதல் ஆகிய நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  

79 ஜோடி மணமக்களுக்கு அமைச்சர் காமராஜ் தலைமையில் திருமணம்

இதன் தொடர்ச்சியாக நேற்று (26.02.2018) காலை திருவாரூர் நகரில் வன்மீகபுரத்திலுள்ள அம்மா அரங்கில் 79 ஜோடி மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திருமணங்களை அமைச்சர் காமராஜ் நடத்தி வைத்தார். மணமக்களுக்கு தங்கத்தாலி, குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ, பேன், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசைப் பொருள்களை அ.தி.மு.க. சார்பில் காமராஜ் வழங்கினார்.  

70 வகையான சீர்வரிசைப் பொருள்கள்

திருமணத்தை முன்னிட்டு மணமக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பனிச்சாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர், திருமணம் செய்துகொள்ளும் மணமக்கள் அனைத்து வளங்களுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க