கோயில் விழாவில் மதம்பிடித்த யானை! பாகனைக் காப்பாற்ற நடந்த சாகசம் (வீடியோ)

கேரளாவில் நடைபெற்ற ஒரு கோயில் திருவிழாவின்போது, யானைக்குத் திடீரென மதம்பிடித்தது. தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கேரளா

Photo Credit: Youtube/SONUTHOMAS

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், எட்டுமானுார் என்னும் பகுதியில், நேற்று கோயில் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக யானை ஒன்று அழைத்துவரப்பட்டது. மக்கள் கூட்டத்தைக் கண்டதும் அந்த யானை மீரண்டது.

அதனால் அந்த யானை, அருகில் இருந்தவற்றை அடித்துநொறுக்கி அட்டகாசம்செய்தது. இதனால், மக்கள் செய்வதறியாது தங்களது உரிரைக் காப்பாற்றிக்கொள்ள சிதறி அடித்து, அங்கும் இங்குமாக மிரண்டு ஓடத்தொடங்கினர். யானைமீது இருந்த பாகன், என்ன செய்வது என்று புரியாமல் திகைத்திருந்த நிலையில் கோயில் கட்டடத்தின் மேலே ஏறிய சில இளைஞர்கள் கயிற்றை கீழே இறங்கினர். இந்த கயிற்றை பிடித்துக்கொண்ட பாகனை மேலே தூக்கினர் இளைஞர்கள். சாகசம் செய்து உயிர் பிழைத்துக்கொண்ட பாகன் நிம்மதியடைந்தார்.
யானையால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. 

 

 

Video Courtesy: SONU THOMAS

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!